/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி முடங்கிய பூங்காக்கள்; முதியோர் ,சிறார்கள் நலன் கருதி திறங்க

ADDED : செப் 20, 2024 06:08 AM

குழந்தைகள் விளையாட, முதியவர்கள் நடைபயணம் மேற்கொள்ள என ஒரே இடமாக இருப்பது பூங்காக்கள் தான். ரோடு விரிவாக்கம் என்ற பெயரில் பெரும்பாலான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பதால் பூங்காக்களை தவிர நடைபயணங்களுக்கு மாற்று இடமே இல்லை. ஆனால் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களோ பெரும்பாலும் பராமரிப்பின்றி உள்ளன.
ஊரக பகுதிகளில் உள்ள அம்மா பூங்காங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. நகர் பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக பெரும்பாலான இடங்களில் நவீனவசதிகளுடன் உருவாக்கப்பட்ட பூங்காக்களில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ,பொதுமக்கள் நடை பயிற்சிக்காக பேவர் பிளாக் பதிக்கப்பட்ட தளமும் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால் இவை எவையுமே தற்போது சரியாக இல்லை. இது மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பூங்காக்களின் நிலமை படுமோசமாகத்தான் இருக்கிறது. இவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கட்டணம் வசூலித்தால் அரசுக்கு வருமானம் வரும் என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.