/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் மூடப்பட்டு கிடக்கும் பூங்காக்கள்; இளைப்பாற வழியின்றி முதியோர் தவிப்பு
/
எங்கும் மூடப்பட்டு கிடக்கும் பூங்காக்கள்; இளைப்பாற வழியின்றி முதியோர் தவிப்பு
எங்கும் மூடப்பட்டு கிடக்கும் பூங்காக்கள்; இளைப்பாற வழியின்றி முதியோர் தவிப்பு
எங்கும் மூடப்பட்டு கிடக்கும் பூங்காக்கள்; இளைப்பாற வழியின்றி முதியோர் தவிப்பு
ADDED : ஏப் 30, 2024 05:17 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்தாமல் மூடிக்கிடப்பதால் இளைப்பாற வழியின்றி முதியோரும், குழந்தைகளை மாலை பொழுதில் விளையாட வைக்க முடியாது பெற்றோரும் பரிதவிக்கின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாமென எச்சரிக்கைகளும் விடப்பட்டிருக்கிறது. இதனால் பெரும்பாலும் மக்கள் வீடுகளில் முடங்கி வருகின்றனர். இந்நிலையில் மாலையில் குழந்தைகள் விளையாட, முதியவர்கள் நடைபயணம் மேற்கொள்ள ஒரே இடமாக இருப்பது பூங்காக்கள் தான்.
ரோடு விரிவாக்கள் என்ற பெயரில் பெரும்பாலான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பதால் பூங்காக்களை தவிர நடைபயணங்களுக்கு வேறு மாற்று இடமே இல்லை. ஆனால் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களோ பெரும்பாலும் பராமரிப்பின்றி மூடப்பட்டுதான் கிடக்கின்றன.
திண்டுக்கல் நகரைப் பொறுத்தவரயைில் 48 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன், பொதுமக்கள் நடைபாதையில் செல்லும் வகையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தளத்துடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் ராஜலட்சுமிநகர், மரியநாதபுரம், விவேகானந்தன் நகர், ஆர்எம். காலனி உள்ளிட்ட இடங்களில் சராசரியாக தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இவை எவையுமே தற்போது சரியாக இல்லை. இது மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பூங்காக்களின் நிலமையும் படுமோசமாகத்தான் இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் மதுபான பார்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி செயல்படுகின்றன. அரசு மதுபான பார்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை மக்களின் அத்தியவசிய பயன்பாட்டிற்கு கொடுப்பதில்லை. பூங்காக்களை சீரமைத்து நவீன வசதிகளை ஏற்படுத்தி கட்டணம் வசூலித்தால் அரசுக்கு வருவாய் வரும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
..........
அலைபேசிக்கு அடிமையாகும் குழந்தைகள்
பெரும்பாலான பூங்காக்கள் பூட்டியே கிடக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டும் வெயிலின் காரணமாக எங்கும் அழைத்து செல்ல முடிவதில்லை. சரி பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று வெளியுலக அனுபவத்தை கொடுக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. இதனால் குழந்தைகள் அலைபேசியிலே மூழ்கி விடுகின்றனர்.
இது போல் முதியவர்கள் சிறு நடைபயணத்திற்கு உதவியாக இருந்தது இந்த பூங்காக்கள் தான். அவர்களும் வீட்டிற்குள்ளே முடங்கி சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் மக்களுக்கு தேவையற்ற மதுபான பார்களோ 24 மணி நேரமும் செயல்படுகிறது என்பது வேதனையாக இருக்கிறது .
குப்புசாமி, சமூக ஆர்வலர் ,திண்டுக்கல்.

