/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயனற்று போன பூங்கா; போதை ஆசாமிகள் தொல்லை பழநி 28வது வார்டில் தொடரும் அவலம்
/
பயனற்று போன பூங்கா; போதை ஆசாமிகள் தொல்லை பழநி 28வது வார்டில் தொடரும் அவலம்
பயனற்று போன பூங்கா; போதை ஆசாமிகள் தொல்லை பழநி 28வது வார்டில் தொடரும் அவலம்
பயனற்று போன பூங்கா; போதை ஆசாமிகள் தொல்லை பழநி 28வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : செப் 19, 2024 05:20 AM

பழநி: பயனற்று போன பூங்கா, போதை ஆசாமிகள் தொல்லை என பழநி நகராட்சி 28 வது வார்டு மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
அடிவாரம் திலகர் வீதி, குரும்பர் தெரு, பாட்டாளி தெரு பகுதிகளை கொண்ட இந்த வார்டில் அடிவாரம் பகுதியில் குறுகிய சந்து உடன் சாலைகள் உள்ளது.
இப்பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.இதனால் சிறுவர்கள், பெரியவர்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். பூங்கா அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியமாகிறது . இங்குள்ள சாலைகள் அனைத்துப் பகுதிகளிலும் முறையாக இல்லை. இதனால் பலரும் பாதிக்கும் நிலை உள்ளது.
ரோந்து பணியை அதிகரியுங்க
சந்திரன், ஒப்பந்ததாரர், பாட்டாளி தெரு: பூங்கா கதவு ,விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. இங்கு போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். போதை ஆசாமிகள் தொல்லையும் உள்ளது. சாலைகளும் மோசமடைந்துள்ளன .
ஜிகாபைப் திட்டத்தில் தண்ணீர் வரவில்லை. இத்திட்டத்தை வார்டில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் .
நடவடிக்கை எடுங்க
நாகராஜ், பெட்டிக்கடை, திலகர் வீதி : தெரு நாய்கள் அச்சுறுத்தலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். பூங்கா வரும் சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் சாலை அமைக்க வேண்டும். வெளி நபர்கள் நடமாட்டத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் பைப் உடைப்பு
தில்லை மணி, மளிகை கடை, பூந்தோட்டம்: ஜிகா பைப்லைன் அமைத்தவர்கள் தண்ணீர் தொட்டி வரும் பைப்பை உடைத்து விட்டனர். அதை சரி செய்யாமல் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பைப் இணைப்பு கொடுத்து தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
அகிலாண்டம் , கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி கூட்டத்தில் பேசி உள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பூங்கா பகுதியை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை அமைத்துள்ளோம். சாக்கடைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தெருவிளக்கு செயல்பாடு ,குப்பை அகற்றுதல் முறையாக நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடையும் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.