/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேர்தல் சுவர் விளம்பரங்களுக்கு இடம் பிடிப்பதில் மும்முரம்; வேட்பாளர் பெயரின்றி சின்னம் வரையும் கட்சிகள்
/
தேர்தல் சுவர் விளம்பரங்களுக்கு இடம் பிடிப்பதில் மும்முரம்; வேட்பாளர் பெயரின்றி சின்னம் வரையும் கட்சிகள்
தேர்தல் சுவர் விளம்பரங்களுக்கு இடம் பிடிப்பதில் மும்முரம்; வேட்பாளர் பெயரின்றி சின்னம் வரையும் கட்சிகள்
தேர்தல் சுவர் விளம்பரங்களுக்கு இடம் பிடிப்பதில் மும்முரம்; வேட்பாளர் பெயரின்றி சின்னம் வரையும் கட்சிகள்
UPDATED : மார் 18, 2026 07:22 AM
ADDED : மார் 18, 2026 06:02 AM

வடமதுரை: தேர்தலுக்காக முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடா என முழு வடிவம் இறுதியாக நிலையிலும் வேட்பாளர் பெயரின்றி தற்போதே சுவர்களை பிடித்து கட்சி சின்னங்களை எழுதும் பணியில் அ.தி.மு.க.,- தி.மு.க.,வினர் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர்.
சட்டசபை தேர்தல் மார்ச் 15ல் அறிவிக்க ஏப்.,23ல் ஓட்டுப்பதிவு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் ஊராட்சி பகுதியில் மட்டும் சுவர் விளம்பரங்கள் எழுத தேர்தல் கமிஷன் அனுமதிக்கிறது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சுவர் விளம்பரம் எழுதவோ, போஸ்டர் ஒட்டவோ முடியாது. ஒரே நேரத்தில் சுவர் விளம்பர பணி செய்ய வேண்டிய நிலையில் ஓவியர்களுக்கு தட்டுப்பாடு , கிராக்கி ஏற்படும்.
தங்கள் கட்சி போட்டியிடும் என்பதில் உறுதியாக தெரிந்த சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர் பெயருக்கு மட்டும் இடம் விட்டு சுவர் விளம்பரங்களை தற்போதே எழுத துவங்கி உள்ளனர். குறிப்பிட்ட வேட்பாளர் தான் போட்டியிடுவார் என தெரிந்தாலும் அவரது பெயரை எழுதுவது கட்சி தலைமையை மதிக்காத தன்மை என கருதி வேட்பாளர் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் இரு முக்கிய கூட்டணிகளில் முன்னுரிமை பெற்ற கட்சிகளாக இருக்கும் தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் சுவர் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஆங்காங்கே த.வெ.க., நாம் தமிழர் கட்சி சார்பிலும் சுவர் விளம்பரங்களுக்கு இடம் பிடித்து ரிசர்வ்' என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் சின்னங்களை வரைந்து விட்டால் பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் குறைந்த நேரத்திலே பெயரை எழுதி சுவர் விளம்பரத்தை நிறைவு செய்யலாம் என்பதால் சின்னம் வரையும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர். அதேநேரம் பல இடங்களில் அடுத்த கட்சியினர் பிடித்த இடங்களில் அத்துமீறி சின்னம் வரைவதால் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

