/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மீடியனில் கட்சி கொடிகள்விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
மீடியனில் கட்சி கொடிகள்விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
மீடியனில் கட்சி கொடிகள்விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
மீடியனில் கட்சி கொடிகள்விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 09, 2025 03:37 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கட்சி கொடிகளை சென்டர் மீடியனில் உள்ள துவாரத்தில் கம்பை செலுத்தி ரோட்டியொட்டி விபத்து ஏற்படுத்தும் வகையில் கொடி கம்பங்களை கட்டுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் பேகம்பூர் மதுரை ரோட்டில் காங்., சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது. இதற்காக அக்கட்சியின் கொடிகள் சென்டர் மீடியனில் உள்ள சிறு துளைகளில் கம்பை செலுத்தி அதில்கொடி கம்பம் நிறுவப்பட்டது. இந்த துளைகளில் அமைக்கப்பட்ட சிறு கம்புகள் கூர்மையான முனைகளாக இருந்தன.
இதனால் ரோட்டின் வலது பக்கம் முன்னேறும் கார், டூவீலர் வாகன ஓட்டிகள் கூர்மையான கம்பின் முனைகளால் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது. போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்தும் இது போன்ற அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சி கொடிகளை கட்டுவதற்கு துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கப்பட்டதற்கு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்களுக்கு இடையூறு தரும் கட்சிகள் மீது துறை அதிகாரிகள் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

