/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அண்ணாதுரைக்கு கட்சியினர் மரியாதை
/
அண்ணாதுரைக்கு கட்சியினர் மரியாதை
ADDED : பிப் 04, 2024 04:48 AM
திண்டுக்கல் : மறைந்த தலைவர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியில் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மருத்துவமனை அருகில் உள்ள அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்சக்கரபாணி தலைமை வகித்தார். எம்.பி., வேலுச்சாமி, எம்.எல்.ஏ., காந்திராஜன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமையில் பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, முன்னிலையில் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அம்மா பேரவை செயலாளர் பாரதிமுருகன், இளைஞரணி செயலாளர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஜெயபால், பழனிச்சாமி, உதயகுமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், மின்சார பிரிவு திட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சின்னு, மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் ராமமூர்த்தி, கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார் பங்கேற்றனர்.