/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' ஏரிச்சலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பயணிகள் முகம் சுளிப்பு
/
'கொடை' ஏரிச்சலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பயணிகள் முகம் சுளிப்பு
'கொடை' ஏரிச்சலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பயணிகள் முகம் சுளிப்பு
'கொடை' ஏரிச்சலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பயணிகள் முகம் சுளிப்பு
ADDED : ஏப் 14, 2025 05:51 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் இருதயமாக இருப்பது ஏரியாகும். 5.கி. மீ., சுற்றளவில் உள்ள இந்த ஏரியில் குதிரை, சைக்கிள் சவாரி, நடைபயிற்சி மேற்கொண்டு பயணிகள் உற்சாகம் அடைவது வழக்கம். ஏரி நகராட்சி கட்டுப்பாட்டிலும், ஏரிச்சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்நிலையில் ஏரிச்சாலை முழுவதும் ஆங்காங்கே மழை நீர் குளம் போல் தேங்கும் நிலை நீடிக்கிறது. ஏரிச்சலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி செல்லும் நிலையில் தேங்கி நிற்கும் மழை நீர் சுற்றுலா பயணிகள் மீது வாரி இறைக்கிறது. நாள் கணக்கில் தேங்கி நிற்கும் இந்த தண்ணீரில் கால்நடைகளின் எச்சம், சிறுநீர், சேறு சகதி என சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிகிறது. இதனால் பயணிகள் நாள்தோறும் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி நடை மேடை பணிகளை துரிதப்படுத்தாமல் கிடப்பில் விடுத்துள்ளதும், நெடுஞ்சாலைத்துறையும் மழை நீர் வாய்க்காலை அமைத்து தண்ணீர் வெளியேற்றததால் தேங்கி நிற்கும் நிலை உருவாகியுள்ளது. மழை நீர் ஏரியில் வழிந்து ஒடும்படி உயரமான ரோடு அமைக்காமல் ஏரியின் மட்டமும், ரோட்டின் உயரமும் ஒரு சேர இருப்பதால் தண்ணீர் எளிதில் கடந்து செல்ல முடியாமல் தேங்குகிறது. இவ்விரு துறைகளின் மாறுபட்ட போக்கால் சுற்றுலா பயணிகள் பாதிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை பெயரளவிற்கு குழாய் பாலங்களை அமைத்த போதும் தண்ணீர் வடியவில்லை. இச்சூழலை தவிர்க்க நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து ஏரிச்சாலையில் தண்ணீர் தேங்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

