/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் குவிந்த பயணிகள்
/
கொடைக்கானலில் குவிந்த பயணிகள்
ADDED : மார் 20, 2026 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
யுகாதி, ரம்ஜான், வார விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். பிரையன்ட் பூங்கா,ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலத்தை அவர்கள் கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மழை பெய்ததால் குளு குளு சீதோஷ்ண நிலை நிலவியது.

