/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த பஸ் ஸ்டாப்பால் பயணிகள் அவதி
/
சேதமடைந்த பஸ் ஸ்டாப்பால் பயணிகள் அவதி
ADDED : நவ 17, 2025 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: கொடைக்கானல் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப் சேதமடைந்துள்ளது.
கொடைக்கானல் மெயின் ரோட்டில் உள்ள கும்பறையூர் பிரிவில் வனத்துறை சில ஆண்டுகளுக்கு முன் பஸ் ஸ்டாப்பை கட்டமைத்தது. தொடர்ந்து இயற்கை சீற்றம் மரக்கிளை முறிந்து மேற்கூரை சேதமடைந்தது. இருக்கை மற்றும் வளாகச் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழையின் போது சுற்றுலா பயணிகள் நிற்கவும், கும்பரையூர், பூலத்தூர் கிராமத்தினர் சந்திப்பு பஸ்சுக்காக இங்கு காத்திருப்பது உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பஸ்ஸ்டாப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

