/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூடைப்பந்தில் சாதித்த பட்டிவீரன்பட்டி மாணவி
/
கூடைப்பந்தில் சாதித்த பட்டிவீரன்பட்டி மாணவி
ADDED : அக் 26, 2025 05:22 AM

பட்டிவீரன்பட்டி: தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்ற பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவியை பள்ளி நிர்வாகிகள் வாழ்த்தி பரிசு வழங்கினர்.
பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கனிஷ்கா. 13- வயது உட்பட்ட தமிழக கூடைப்பந்தாட்ட அணிக்கு தேர்வாகி உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த போட்டியில் விளையாடினார். 30 மாநிலங்களை சேர்ந்த அணிகள் விளையாடின.
தமிழக அணி 82: 32 என்ற புள்ளி கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
தமிழக அணிக்காக விளையாடி சாதனை புரிந்த மாணவி, தலைமை பயிற்சியாளர் செந்தில்குமாரை என்.எஸ்.வி.வி .,பள்ளிகளின் தலைவர் முரளி, செயலாளர் மோகன்குமார் பாராட்டி பரிசு வழங்கினர். பள்ளி தலைவர் கோபிநாத், செயலர் பிரசன்னா, முதல்வர் ராம்குமார் உடனிருந்தனர்.

