ADDED : மே 31, 2024 06:12 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்போது புகைத்த 9 பேருக்கு தலா ரூ.100 என ரூ.900 அபராதம் விதித்தனர்.
விவசாயியை தாக்கிய காட்டுப்பன்றி
நெய்க்காரப்பட்டி: பழநி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் 39. ரெட்டையம்பாடி பகுதி தோட்டத்திற்கு சென்றார். அங்கு பதுங்கி இருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. பலத்த காயமடைந்த அவர் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வையாபுரி குளத்தில் சர்வே
பழநி : பழநி வையாபுரி குளத்தில் 5 ஏக்கர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. குளத்தின் கரைகளில் சரியான முறையில் சர்வே செய்ய விவசாயிகள் கோரினர். தற்போது குளத்தின் சர்வே குறித்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி டி.ஜி.பி.எஸ்., முறையில் சர்வே பணிகள் துவங்கியது. 300-க்கு மேற்பட்ட இடங்களில் சர்வே பதிவுகள் எடுக்கப்பட உள்ளன. பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பஸ் இயக்க கையெழுத்து இயக்கம்
சாணார்பட்டி : கூவனுாத்து வழியாக ராஜக்காபட்டிக்கு தினமும் காலை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில நாட்களாக பஸ் நிறுத்தப்பட்டது. நேற்று கூவனுாத்து பகுதியில் மீண்டும் பஸ்சை இயக்க கோரி கையழுத்து இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் சின்னப்பன், நிர்வாகி வெள்ளை கண்ணன் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.