ADDED : மார் 09, 2024 09:15 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி,சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். புகை பிடித்த 13 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களுக்கு தலா ரூ.100 என ரூ.1300 அபராதம் விதிக்கப்பட்டது.
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் வாடகை கடைகளில் பாக்கி தொகை கட்டாவிட்டால் கடைக்கு பூட்டி சீல் வைக்க கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பூ மார்க்கெட் பகுதியில் ரூ. லட்சக்கணக்கில் வாடகை செலுத்தாத 4 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
பிளாஸ்டிக் பறிமுதல்
திண்டுக்கல் : உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி உத்தரவில் அலுவலர்கள் செல்வம்,ஜோதிமணி,சரவணக்குமார்,முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் புறநகர் பகுதிகளான கரூர்ரோடு,சேலம் ரோடு,திருச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். 10 கடைகளில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியது. ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். 1 கடையில் 5 கிலோ தடை புகையிலை இருந்தது தெரிந்தது. அதற்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து புகையிலையை பறிமுதல் செய்தனர்.
பா.ம.க., செயற்குழு கூட்டம்
திண்டுக்கல் : கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் செயலாளர்ஜான்கென்னடி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நிர்வாகிஸ்ரீரங்கன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சிற்றரசு, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன்,பகுதி செயலாளர் ராஜேந்திரன், வேலுமணி, ஊஒன்றிய செயலாளர்கள் கணேசன், சேசுராஜ், ராமச்சந்திரன், குமார் முன்னிலை வகித்தனர்.மகளிர் அணி நிர்வாகி சுதா, மாவட்ட மாணவர் சங்க தலைவர் கோபி,ஒன்றிய பொறுப்பாளர்கள் நாகராஜ், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். மாவட்ட மாணவர் சங்க செயலாளர் கருணா மகேஸ்வரன் நன்றி கூறினார்.

