/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கூல்லிப்' விற்ற கடைக்கு அபராதம்
/
'கூல்லிப்' விற்ற கடைக்கு அபராதம்
ADDED : நவ 08, 2024 04:34 AM
வடமதுரை: மாணவர்களின் நலன் கருதி போதை பொருள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சுகாதாரம், உணவு பாதுகாப்பு, பள்ளி கல்வி, காவல் துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் நேற்று காலை அய்யலுார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் அய்யனார் பாலம் பகுதி சின்னம்மாள் கடையில் நடத்திய ஆய்வில் ''கூல்லிப் ' விற்றதை கண்டறிந்தனர். இதையடுத்து கடைக்கு சீல் வைத்து ரூ.25,000 அபராதம் விதித்தனர். பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் அபாயம் குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்தனர். அய்யலுாரில் பொது சுகாதார குறைபாடு இருந்த கடை, வீடுகள், நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கபட்டது. சீனியர் சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி ஆய்வு மேற்கொண்டனர்.

