ADDED : நவ 19, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 6750ஐ அகவிலைப்படியுடன் அரசு வழங்க வேண்டும், ஈம கிரிகை நிதி ரூ. 25,000 ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு,அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
செயலர் செல்வராஜ் கோரிக்கை பேசினார். ஊராக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலர் ராஜசேகரன் பேசினார்.
பொருளாளர் குமரம்மாள் நன்றி கூறினார்.

