ADDED : மார் 16, 2025 01:08 AM

திண்டுக்கல்; சத்துணவு அங்கன்வாடி ஓய்வு ஊதியர்களுக்கு 2025 -- 26 பட்ஜெட்டில் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6750 அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள்நாராயணசாமி,பால கிருஷ்ணன், பெருமாள், விசாலாட்சி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் செல்வராஜ் பேசினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயலாளர்ராஜசேகரன், முன்னாள்மாநில துணைத் தலைவர் சத்துணவு ஊழியர் சங்கம் சக்திவேல், முன்னாள் வட்டார தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் மரியபுஷ்பம், வடமதுரை முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் பூமி பாலகிருஷ்ணசாமி,மாவட்ட பொருளாளர் குமரம்மாள் நன்றி கூறினார்.