/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 05:58 AM

திண்டுக்கல்: ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய (யு.பி.எஸ்.,)முறையை ரத்துசெய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மதுரையில் சி.ஜி.ஹெச். எஸ்., மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் பழநி ரோடு தொலைபேசி அலுவலகம் முன் திண்டுக்கல் மாவட்ட தேசிய ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
என்.சி.சி.பி.ஏ.,கூட்டமைப்பு ஆதிமூலம் தலைமை வகித்தார். பி.எஸ்.என் எல் .,கிரிஸ்டோபர் பேசினார். ரயில்வே ஓய்வூதியர் சங்கம் கோபால்,அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்கம் ராஜாராம், தேசிய ஓய்வூதியர் கூட்டமைப்பு ஜான்போர்ஜியா,அகில இந்திய அஞ்சல் ஆர்.எம் எஸ்., ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் மருதை பங்கேற்றனர்.
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் அமைப்பு ஜோதிநாதன் நன்றி கூறினார்.