/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொசு உற்பத்திக்கு துணைபோகும் கழிவுநீரால் மக்கள் பாதிப்பு...
/
கொசு உற்பத்திக்கு துணைபோகும் கழிவுநீரால் மக்கள் பாதிப்பு...
கொசு உற்பத்திக்கு துணைபோகும் கழிவுநீரால் மக்கள் பாதிப்பு...
கொசு உற்பத்திக்கு துணைபோகும் கழிவுநீரால் மக்கள் பாதிப்பு...
ADDED : ஜன 08, 2024 05:09 AM

பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடிமையம்
வடமதுரை ஒன்றியம் வி.சிங்கார கோட்டையில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் குழந்தைகள் தனியார் இடத்துக்கு செல்கின்றனர். புதிய கட்டடத்தை திறக்க வேண்டும். அருள்பாண்டி, சிங்காரகோட்டை.--------
கொசு உற்பத்திக்கு துணைபோகும் கழிவுநீர்
திண்டுக்கல் குள்ளனம்பட்டி துர்க்கை அம்மன் கோயில் தெருவில் நீண்ட நாட்களாக வடிகால் இல்லாமல் கழிவு நீர் ரோட்டோரத்தில் தேங்குகிறது. மழை நேரங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. பல மாதமாக கழிவு நீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தியாகிறது. கழிவுநீர் தேங்காமல் தடுக்க வேண்டும் ரூபன், குள்ளனம்பட்டி.---------
குப்பையால் உருவாகும் சீர்கேடு
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சிறுமணி நகரில் குப்பையை ரோட்டோரங்களில் குவித்து வைக்கின்றனர். இதனால் அவைகள் அடிக்கடி ரோட்டில் சிதறி விபத்துக்கு வழிவகை செய்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரவீன்குமார், பாலகிருஷ்ணாபுரம்.----------
நடுரோட்டில் நிற்கும் மின்கம்பம்
திண்டுக்கல் பேகம்பூர் எஸ்.பி.டி. மஹால் பின்புறம் 40வது வார்டு திருவள்ளுவர் முதல் தெருவில் நடு ரோட்டில் உள்ள மின்கம்பத்தால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. தொடரும் இப்பிரச்னையால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.நவாஸ் பைசில், திண்டுக்கல்.----------சேதமான பள்ளி கட்டடம்
பழநி அருகே மானுார் அரசு துவக்கப் பள்ளியில் முன்பகுதி கதவு கட்டடம் சேதமடைந்து சாயும் நிலையில் உள்ளது. இவ்வழியில் மாணவர்கள் தினந்தோறும் கடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கட்டடத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முஹம்மதுஜின்னா,மானுார் .----------
கழிவுநீரால் தொடரும் பாதிப்பு
திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் திண்டுக்கல் ஸ்கேன் எதிரில் உள்ள கழிவு நீர் ஓடையில் நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தொடர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஓடையை துார்வாரி கழிவுநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.நவஜீவன்,திண்டுக்கல்.
------------சகதியான ரோடால் அவதி
சாணார்பட்டி ஒன்றிய அலுவலகம் அருகில் குபேரன் நகர் ரோடு சகதியாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளது. நீண்ட நாட்களாக கழிநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. புதிய ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சதாசிவம், சாணார்பட்டி.------------
.............................