ADDED : பிப் 06, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல் முள்ளிப்பாடியில் காவலர் குடியிருப்பிற்கு பின்புறம் சுப்பிரமணியபுரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன் புதிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்தது.
பணிகள் முடிந்த நிலையில் முறையாக கழிவு நீர் செல்ல ஓடைகளை சரி செய்யவில்லை. 6 மாதத்திற்கு மேலாக ஒரே இடத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்களாக தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கேடு தாங்க முடியாமல் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.