/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேட்டி, சேலை வழங்கவில்லை கடையை முற்றுகையிட்ட மக்கள்
/
வேட்டி, சேலை வழங்கவில்லை கடையை முற்றுகையிட்ட மக்கள்
வேட்டி, சேலை வழங்கவில்லை கடையை முற்றுகையிட்ட மக்கள்
வேட்டி, சேலை வழங்கவில்லை கடையை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜன 12, 2025 05:11 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ரேஷன் கடையில் பொங்கல் வேட்டி, சேலை முழுமையாக கிடைக்காததை கண்டித்து கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டி, அலக்குவார்பட்டி, செட்டி நாயக்கன்பட்டி பகுதி மக்கள் கள்ளிப்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் பெறுகின்றனர்.
1062 ரேஷன் கார்டுக்கு வழங்க வேண்டிய பரிசு பொருட்களில் வேட்டி, சேலை 450 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளாக இதே போல் தான் வழங்குவதாக குற்றம் சாட்டிய மக்கள் கடையை முற்றுகையிட்டனர்.
இதன் பின் கடை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதே போல் நத்தம் ரோடு பொன்னரகம் , தோட்டனுாத்து பகுதியிலும் வேட்டி, சேலைகள் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.