sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீரை விலைக்கு வாங்கும் மக்கள்

/

முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீரை விலைக்கு வாங்கும் மக்கள்

முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீரை விலைக்கு வாங்கும் மக்கள்

முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீரை விலைக்கு வாங்கும் மக்கள்


ADDED : ஆக 23, 2025 05:20 AM

Google News

ADDED : ஆக 23, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : ராமநாதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மக்கள் நல்ல குடிநீரை குடித்து வந்த நிலையில் தற்போது சுத்திகரிப்பு நிலையம் செயல்பாடற்று போனது. இதனால் மக்கள் கூடுதல் விலை கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்குகின்றனர்.

வேடசந்துார் ஒன்றியம் கோவிலுார் ஊராட்சி கே.ராமநாதபுரத்தில் 400க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்கள் முயற்சியின் பேரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.5 லட்சம் திட்ட மதிப்பில் ஸ்வஜல்தாரா திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலை தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள ரூமில் அதற்கான சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு ரூ.1 காயின் செலுத்தி ஒரு குடம் (10 லிட்டர்) குடிநீர் பிடித்து வந்தனர். ராமநாதபுரம் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்களும் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். திட்டம் நன்கு செயல்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மோட்டார் பழுதடைந்ததால் திட்டம் முடங்கியது. பொதுமக்களோ ஊராட்சி நிர்வாகமோ அதற்கான சரி செய்யக்கூடிய முயற்சியை எடுக்காத நிலையில் இன்று திட்டம் காட்சி பொருளாக உள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் வாகனங்களில் கொண்டுவரப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடம் ரூ.20 கொடுத்து வாங்குவதாக கூறுகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கை எல்லாம் பயன்பாடற்ற நிலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் கொண்டு வந்து மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே ஆகும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குடிப்பதற்கு உகந்ததாக இல்லை எல்.ராஜா, குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர், ராமநாதபுரம்: திண்டுக்கல் மாவட்ட அளவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே கிராம மக்களின் குடிநீர் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது இங்குதான். குடிநீர் மோட்டார் பழுதடைந்த பிறகு அதை சரி பார்க்கவில்லை. எங்கள் ஊர் நாட்டாமை ஜெயக்குமாரின் முயற்சியால் தான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் இத்திட்டமும் முடக்கப்பட்டு விட்டது. ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்தாலும் அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. ரூ.20 விலை கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கும் நிலையில் உள்ளனர். மக்கள் நலன் கருதி சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

குடம் குடிநீர் ரூ.20 கே.சுப்புலட்சுமி, குடும்பத் தலைவி, ராமநாதபுரம்: இப்பகுதி மக்கள் ரூ. 1செலுத்தி 10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிடித்து வந்தனர். ஒரு பெரிய குடத்தில் குடிநீர் பிடிக்க வேண்டுமென்றால் இரண்டு ஒரு ரூபாய் காசுகள் போட்டால் போதுமானதாக இருந்தது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்து பழக்கப்பட்ட இப்பகுதி மக்கள் தற்போது நிலையம் செயல்பாடற்று போனதால் ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.20 கொடுத்து விலைக்கு வாங்கி குடிக்கும் நிலையில் உள்ளனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பயன்பாடற்ற சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us