/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலையில் கவிழ்ந்த மினி வேன் தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்
/
சாலையில் கவிழ்ந்த மினி வேன் தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்
சாலையில் கவிழ்ந்த மினி வேன் தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்
சாலையில் கவிழ்ந்த மினி வேன் தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்
ADDED : மார் 02, 2024 05:43 AM

வேடசந்துார் : கல்வார்பட்டி நான்குவழிச்சாலையில் தக்காளி வேன் கவிழ்ந்ததில் 3 டன் தக்காளி ரோட்டில் சிதறியது.இதை அந்தப்பகுதி மக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து தக்காளி ஏற்றிய மினி வேன் ஒன்று துாத்துக்குடி நோக்கி சென்றது. அரூரை சேர்ந்த மணிகண்டன் 22, ஓட்டி சென்றார். வேனில் நுாறு பெட்டிகளில் 3 டன் தக்காளி இருந்தது. திண்டுக்கல் நெடுஞ்சாலை கல்வார்பட்டி அருகே வந்த போது பின் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டின் ஒரு புறம் சாய்ந்தது. இதில் தக்காளிகள் ரோட்டில் சிதறியது. பின்னர் வேனை எடுத்து சென்றவர்கள் தக்காளியை அப்படியே விட்டு சேன்றனர். அதிகாலை 5:30 மணிக்கு நடந்த நிலையில் தக்காளி ரோட்டில் சிதறி கிடந்ததை கண்ட மக்கள், ரோட்டில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பைகளில் அள்ளிச் சென்றனர். சுற்றுப்பகுதியில் பரவ அதை அறிந்த மக்களும் பைகளைக் கொண்டு வந்து அள்ளி சென்றனர்.