/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதார் கார்டை புதுப்பிக்க போஸ்ட் ஆபிசில் குவிந்த மக்கள்
/
ஆதார் கார்டை புதுப்பிக்க போஸ்ட் ஆபிசில் குவிந்த மக்கள்
ஆதார் கார்டை புதுப்பிக்க போஸ்ட் ஆபிசில் குவிந்த மக்கள்
ஆதார் கார்டை புதுப்பிக்க போஸ்ட் ஆபிசில் குவிந்த மக்கள்
ADDED : செப் 12, 2024 04:47 PM

திண்டுக்கல் : செப்.14ல் ஆதார் கார்டை புதுப்பிக்க கடைசி நாள் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். அது பொய்யான செய்தி என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் ஆதார் கார்டுகளை புதுப்பிப்பவர்களுக்கு செப்.14 வரை இலவசம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை தவறாக சமூக வலைதளங்களில் செப்.14 தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகளை புதுப்பிக்க கடைசி நாள் என செய்தி பரவியது. இதைப்பார்த்த திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் செப்.14 க்கு பிறகு ஆதார் கார்டை புதுப்பிக்க முடியாது என நினைத்து காலை முதல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் மக்கள் குவிந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தபால் நிலைய அதிகாரிகள் வந்திருந்த மக்களிடம் விசாரணை நடத்தினர். அதில் செப்.14 ல் ஆதார் கார்டு புதுப்பிக்கும் கால அவகாசம் முடிவதால் அதிகளவில் மக்கள் வந்தது தெரிந்தது.
அதிகாரிகள் அங்கு வந்த மக்களிடம் ஆதார் கார்டுகளை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம் அதற்கு கால அவகாசமெல்லாம் இல்லை என எடுத்துரைத்தனர். இதையடுத்து கூடியிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திண்டுக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் அறிக்கையில்,ஆதார் கார்டை புதுப்பிக்காதவர்கள் தபால் நிலையங்களில் செப்.14க்குள் புதுப்பித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அதற்க்கு பின் பதிவு செய்ய இயலாது. என்ற பொய் வதந்தியை சிலர் சமூக வலை தளங்களில் செய்தியாக பரப்புகின்றனர். இது பொய்செய்தி யாரும் நம்ப வேண்டாம்.
ஆதார் தொடர்பான சேவைகளை எப்போது வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு கால நிர்ணயம் கிடையாது.
ஆன்லைன் மூலமாக ஆதாரில் மாற்றம் செய்வோருக்கு கட்டணம் இல்லாமல் இலவச சேவை பெறவே கடைசி தேதி செப்.14 ஆகும் எனக்குறிப்பிட்டார்.