/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுமாடு, தெரு நாய்களால் அச்சத்தில் மக்கள் கொடைக்கானல் 17 வது வார்டில் தொடரும் அவலம்
/
காட்டுமாடு, தெரு நாய்களால் அச்சத்தில் மக்கள் கொடைக்கானல் 17 வது வார்டில் தொடரும் அவலம்
காட்டுமாடு, தெரு நாய்களால் அச்சத்தில் மக்கள் கொடைக்கானல் 17 வது வார்டில் தொடரும் அவலம்
காட்டுமாடு, தெரு நாய்களால் அச்சத்தில் மக்கள் கொடைக்கானல் 17 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : அக் 26, 2024 05:40 AM

கொடைக்கானல்: காட்டுமாடு, தெரு நாய்களால் குடியிருப்புவாசிகள் அச்சம், கூகுள் மேப் தவறான தகவலால் சுற்றும் சுற்றுலா பயணிகள் என கொடைக்கானல் 17 வது வார்டில் பிரச்னைகளுக்கு பஞ்சம் இல்லை .
தந்திமேடு, கூலிகாட் ரோடு, எஸ்.எஸ். காலனி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் பட்டா இல்லாத நிலையில் வசதிகளை பெற முடியாது மக்கள் தவிக்கின்றனர்.
தெருநாய்கள் காட்டு மாடுகள் நடமாட்டத்தால் மக்கள் வெளியே செல்லவே அச்சத்துடன் உள்ளனர்.
பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சி நடமாட்டமும் அதிகளவில் உள்ளதால் குடியிருப்போர் பீதியில் உள்ளனர். கூகுள் மேப்பில் வட்டக்கானல் செல்லும் ரோடு வழித்தடம் தந்திமேட்டை தவறாக வழிகாட்டுவதால் சுற்றுலா பயணிகள் தந்திமேடு வந்து குறுகிய பாலங்களில் திரும்ப முடியாமல் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க மெயின் ரோட்டில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.
வேண்டாம் மேற்கத்திய கோப்பை
பாரூக் அகமது, இயற்கை ஆர்வலர் : வார்டில் உள்ள கால்நடை மருத்துவமனை புதர்மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. வார்டில் ஏராளமானவர்களுக்கு பட்டா இல்லாமல் உள்ளனர். குடியிருப்புகளில் அகற்றப்படாத செடிகளால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. வார்டில் உள்ள சமுதாய கழிப்பறையில் மேற்கத்திய கோப்பைகளுக்கு பதில் இந்திய கோப்பைகளை பதிக்க வேண்டும்.
தெரு நடுவில் மின்கம்பம்
பெரியசாமி, வியாபாரம்: வார்டில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். பிலிஸ்விலா சங்கரா பள்ளி அருகில் உள்ள படிக்கட்டு பாதையை மட்டமாக அமைத்து வாகனங்கள் சென்று வர ஏதுவாக அமைக்க வேண்டும். தெருக்களில் நடுவில் உள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளது.
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
செல்லத்துரை, நகராட்சி தலைவர் ,தி.மு.க., : வார்டில் ரூ. 1.50 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வார்டில் பட்டா இல்லாதவர்களுக்கு பழநி எம்.எல்.ஏ., மூலம் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா விரைவில் அமைக்கப்படும். காட்டு மாடு பிரச்னைக்கு வனத்துறையிடம் அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தெருநாய் பிரச்னைக்கு ப்ளூ கிராஸ் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிதியளிக்கிறது. தொடர்ந்து நாய்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் வாரந்தோறும் புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது என்றார்.