/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் நோய் தொற்று பழநி 5 வது வார்டில் அல்லாடும் மக்கள்
/
சாக்கடையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் நோய் தொற்று பழநி 5 வது வார்டில் அல்லாடும் மக்கள்
சாக்கடையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் நோய் தொற்று பழநி 5 வது வார்டில் அல்லாடும் மக்கள்
சாக்கடையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் நோய் தொற்று பழநி 5 வது வார்டில் அல்லாடும் மக்கள்
ADDED : அக் 05, 2024 04:42 AM

பழநி: சாக்கடையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் நோய் தொற்று ,குறுகலான தெருக்கள்,துரத்தும் தெருநாய்கள்,சேதமான தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட பிரச்னைகளுடன் பழநி நகராட்சி 5 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
கட்டபொம்மன் தெரு, கம்பர் தெரு, கோபால் டாக்டர் சந்து பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு நகரின் முக்கிய பகுதியாகவும் குறுகலான சந்துகளை உடையது. முக்கிய அடிப்படை தேவைகளாக ரேஷன் கடை, சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம் போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் அருகில் உள்ள வார்டில் செயல்படும் இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தெரு நாய்கள் தொல்லையால் பெரும் பிரச்னையாக உள்ளது.
நாய்கள் தொல்லை
கந்தராஜ், வியாபாரி, கோபால் டாக்டர் சந்து: இப்பகுதி குறுகலான சந்து .இதில் டூவீலர்கள்,தள்ளுவண்டிகளை நிறுத்திச் செல்வதால் அவசரகால ஊர்திகள் வந்து செல்ல சிக்கல் உள்ளது. நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. சாக்கடை்களை முறையாக துார்வாருவதில்லை. குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும்.
சுகாதாரக்கேடு
பாலசுந்தரராஜா,வியாபாரி, கட்டபொம்மன் தெரு: ஜிகா பைப் லைன் வசதி எங்கள் பகுதியில் முழுமையாக வழங்கப்படவில்லை. தெருவிளக்கு சரியாக பராமரிக்கவில்லை. சாக்கடையில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கட்டபொம்மன் தெருவில் பாதி பகுதிக்கு மேல் தண்ணீர் இணைப்பு இல்லாததால் மிகுந்த அவதி ஏற்படுகிறது.
விபத்து அபாயம்
ஸ்ரீதர், வழக்கறிஞர், கட்டபொம்மன் தெரு: நாய் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு முக்கிய ரோடான புது தாராபுரம் ரோடு கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. வயதானவர்கள் செல்லும்போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. அங்கன்வாடி மையமும் எங்கள் வார்டில் இல்லை. சுகாதார வளாகமும் இல்லாததால் மக்கள் பாதிக்கின்றனர்.
நடவடிக்கை எடுக்கிறோம்
பூங்கொடி,கவுன்சிலர்,(தி.மு.க.,): ரேஷன் கடை, சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம் ஆகியவை வார்டு வரையறையின் போது அருகில் உள்ள வார்டு பகுதிகளில் அமைந்துவிட்டது. ரேஷன் கடை அமைக்க அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி இடம் எங்கள் வார்டில் இல்லை. நாய் தொல்லை அதிகம் உள்ளது நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாக்கடையில் இறைச்சிக்கழிவு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.