/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அல்லல்படும் மக்கள்...
/
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அல்லல்படும் மக்கள்...
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அல்லல்படும் மக்கள்...
அச்சுறுத்தும் தெரு நாய்களால் அல்லல்படும் மக்கள்...
ADDED : நவ 11, 2024 04:48 AM

மக்களை அச்சுறுத்தும் நாய்கள் : திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் சுற்றி தெரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இவைகள் அச்சுறுத்தலாக உள்ளதால் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ்குமார், ரவுண்ட் ரோடு.
--------
புதர் மண்டிய பஸ் ஸ்டாப் : வடமதுரை அக்கரைப்பட்டி ரோட்டில் தாதநாயக்கன்பட்டி பிரிவிலிருக்கும் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மக்கள் வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---
-சங்கர், வடமதுரை.
பயன்பாடில்லாத கட்டடம் : நத்தம் பூதகுடி ஊராட்சி உரக்கிடங்குக்காக அமைக்கப்பட்ட கட்டடம் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. உரக்கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமசிவம், பூதகுடி.
சேதமான ரோடால் அவதி : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்திற்கு செல்லும் ரோடு பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அங்கு ஓட்டுநர் பயிற்சிக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ரோடை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம் குழந்தை,முள்ளிப்பாடி.
-
தண்ணீர் தேங்கும் பாலம் : பழைய கன்னிவாடி முத்தாலம்மன் கோயில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட பாலம் முறையாக பள்ளம் தோண்டி அமைக்காததால் தண்ணீர் செல்ல வழியில்லை. இதனால் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. பாலத்தை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயகுமார், பழைய கன்னிவாடி.
மண்ரோடால் சகதி : பித்தளைபட்டி காளியம்மன் கோயில் எதிரே உள்ள மண் ரோடால் மழை நேரங்களில் சேரும் சகதியாக உள்ளது. மக்கள் பயன்படுத்த முடியாமல் திணறுகின்றனர். ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், பித்தளைப்பட்டி.
குப்பையால் உருவாகும் சீர்கேடு : ஆத்துார் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சி ஜே.புதுக்கோட்டையில் திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியம் நீடிக்கிறது. ரோட்டோரங்களில் பாலித்தீன் கழிவுகளை குவித்து எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதைத்தடுக்க வேண்டும். -
-சோ.செந்தில்குமார், ஜே.புதுக்கோட்டை.