/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆமை வேகத்தில் ரேஷன் கடை கட்டட பணி பிரச்னைகளின் பிடியில் பழநி நகராட்சி 19 வது வார்டு மக்கள்
/
ஆமை வேகத்தில் ரேஷன் கடை கட்டட பணி பிரச்னைகளின் பிடியில் பழநி நகராட்சி 19 வது வார்டு மக்கள்
ஆமை வேகத்தில் ரேஷன் கடை கட்டட பணி பிரச்னைகளின் பிடியில் பழநி நகராட்சி 19 வது வார்டு மக்கள்
ஆமை வேகத்தில் ரேஷன் கடை கட்டட பணி பிரச்னைகளின் பிடியில் பழநி நகராட்சி 19 வது வார்டு மக்கள்
ADDED : மார் 07, 2024 06:34 AM

பழநி: சிவகுரு தெரு, தியாகி குமரன் தெரு, சுப்ரமணியபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு, காமராஜர் தெரு, தேவாங்கர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய பழநி நகராட்சி 19 வது வார்டில் காந்தி மார்க்கெட் பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .இதை கருத்தில் கொண்டு கட்டுமான பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் .இதோடு இங்கு ரேஷன் கடை கட்டுமான பணியும் ஆமை வேகத்தில் நடப்பதால் வார்டு மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
தாமதமாக பணி
விவேகானந்தன், சமூக ஆர்வலர், சிவகுருதெரு: பல ஆண்டுகளாக ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு புதிய கடை கட்டும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நெரிசலால் அவதி
மனோகரன், மளிகை கடை, சவுண்டம்மன் கோயில் தெரு: பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினால் நகரில் சுகாதாரம் ஏற்படும். முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக இந்த வார்டு உள்ளது. இங்குள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோந்தை தீவிர படுத்துங்க
சபரிஹரி, அலைபேசி கடை உரிமையாளர்: மார்க்கெட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வெளிநபர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராவை அதிகப்படுத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
நாய்களுக்கு கருத்தடை
காளீஸ்வரி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் குப்பையை அடிக்கடி அகற்றி விடுகிறோம். புதிய ரேஷன் கடை கட்ட இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைந்து பணி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு மருந்து தொடர்ந்து அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

