sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடிநீர் பிரச்னையால் அல்லாடும் தாதநாயக்கன்பட்டி மக்கள்

/

குடிநீர் பிரச்னையால் அல்லாடும் தாதநாயக்கன்பட்டி மக்கள்

குடிநீர் பிரச்னையால் அல்லாடும் தாதநாயக்கன்பட்டி மக்கள்

குடிநீர் பிரச்னையால் அல்லாடும் தாதநாயக்கன்பட்டி மக்கள்


ADDED : ஜூன் 04, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: ஐவர்மலை செல்லும் சாலை சேதம் , குடிநீர் தட்டுப்பாடு என பழநி தாதநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.

தாதநாயக்கன்பட்டி ஊராட்சியில் பகுதியில் பழநி அடிவாரம் அண்ணா செட்டி மடத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அப்பகுதியில் எந்த வித வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும் குடிநீர் பிரச்னை, ஆக்கிரமிப்புக்கள் அதிகம் உள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணிகள் ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வடக்கு தாதநாயக்கன்பட்டியில் செயல்படும் தபால் அலுவலக கட்டடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

லாரிகளால் ரோடு சேதம்


தேவராஜ்,விவசாயி : வடக்கு தாதநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. லாரிகள் அதிக அளவில் பயணிப்பதால் ரோடுகள் சேதமடைகின்றன.இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

தெருவிளக்கின்றி இருள்


குணசேகரன்,விவசாயி :தாதநாயக்கன்பட்டி வடக்கு இரண்டாவது வார்டில் உள்ள தெருவில் மின் கம்பம் அமைக்கப்படாமல் அந்த தெரு இரவில் இருளடைந்து உள்ளது. ஊராட்சி சார்பில் மின் கம்பம் அமைக்க வேண்டும். தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு தாதநாயக்கன்பட்டியில் இருந்து ஐவர்மலை செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.

உயரமான ரோடுகள்


பாலசுப்பிரமணியன், விவசாயி : வடக்கு தாதநாயக்கன்பட்டி இரண்டாவது வார்டில் குடிநீர் முறையாக வருவதில்லை. தண்ணீர் சரியாக வராததால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தெருக்களில் தண்ணீர் தொட்டி அமைக்காததால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கிறது. இங்குள்ள ரோடு உயரமாக உள்ளதால் வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. சாலை பணியை முடிக்கும் முன் இதனை சரி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us