/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீருக்கு வழி இல்லை; கழிப்பறைக்கு கதவு இல்லை பரிதவிப்பில் திண்டுக்கல் 28வது வார்டு மக்கள்
/
குடிநீருக்கு வழி இல்லை; கழிப்பறைக்கு கதவு இல்லை பரிதவிப்பில் திண்டுக்கல் 28வது வார்டு மக்கள்
குடிநீருக்கு வழி இல்லை; கழிப்பறைக்கு கதவு இல்லை பரிதவிப்பில் திண்டுக்கல் 28வது வார்டு மக்கள்
குடிநீருக்கு வழி இல்லை; கழிப்பறைக்கு கதவு இல்லை பரிதவிப்பில் திண்டுக்கல் 28வது வார்டு மக்கள்
ADDED : ஜூன் 28, 2025 11:51 PM

திண்டுக்கல்: குடிநீருக்கு வழி இல்லை , கழிப்பறைக்கு கதவுகள் இல்லை, கழிவுநீர் போகவும் வழியில்லை என்பன பிரச்னைகளுடன் திண்டுக்கல் மாநகராட்சி 28ம் வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
நெட்டு தெரு, தெரேசர் லைன், சிதம்பரனார் தெரு, முனிசிபல் தெரு, பாரதி தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்தவார்டில் மற்றப்பகுதிகளை ஒப்பிடுகையில் சிறிய தெருக்கள், இறைச்சிக் கடைகள், வாகனப்போக்குவரத்து அதிகம் உள்ளது. குடிநீர் , சுகாதாரம், கழிப்பிடம், கொசுத்தொல்லை என பிரச்னைகளம் அதிகம் உள்ளன. குடிநீருக்கோ, பொது பயன்பாட்டுக்கோ தண்ணீர் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது.
வார்டு முழுவதும் தேங்கி நிற்கும் சாக்கடை, குண்டும் குழியுமான சாலைகள், வீடுகளில் இருந்து வெளியேற வழியின்றி தவிக்கும் கழிவுநீர், வீடுகளுக்கு பட்டா வாங்கமுடியாமல் தவிக்கும் மக்கள் என பலத்தரப்பட்ட பிரச்னைகளை இங்குள்ள மக்கள் சந்திக்கின்றனர்.
முகம்சுளிக்கிறார்கள்
பெருமாள் ,ஊர் நாட்டாமை , நெட்டுத்தெரு: பொது பயன்பாட்டுக்காக 3 சுகாதார வளாகங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 2 பயன்படுத்துவதற்கு பயனற்ற நிலையில் உள்ளது.
கதவுகள் கிடையாது. கழிப்பறை கோப்பை உடைந்துள்ளது. தண்ணீர் வசதியும் இல்லை. குத்தகைதாரர்கள் பிரைவேட் வாகனங்களில் தண்ணீர் வரவழைத்து தொட்டியில் நிரப்புகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் முகம்சுளிக்கும் வகையில் இருக்கும் அந்த கழிப்பறையைதான் வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறோம்.
தகுதியிருந்தும் பெற முடியல
ஆறுமுகம், முனிசிபல் தெரு: தண்ணீர் தேவை பெரும் பிரச்னையாக உள்ளது. இதுவரை இந்த வார்டில் குடிநீருக்கென ஒரு பொதுக்குழாய் கூட இல்லை.
பல வீடுகளில் கழிவுநீர் வெளியேற வழியில்லை. மாதக்கணக்கில்குடிநீருக்காக காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.
காசுக்கொடுத்துதான் வீடுகளுக்கு தண்ணீர் பிடிக்கிறோம். பட்டா இல்லாததால் அரசின் இலவச வீடுக்கட்டும் திட்டத்துக்கு தகுதியிருந்தும் பெற முடியவில்லை. வார்டுக்குள் பல இடங்களிலும் குப்பை கெட்டப்படுகிறது. முன்பெல்லாம் கொசு ஒழிப்பிற்கு புகைமருந்து தெளிப்பார்கள். இப்போதும் அதுவும் இல்லை.
புறக்கணிக்கிறார்கள்
நடராஜன் ,கவுன்சிலர் (வி.சி.க.,): ரூ.10லட்சத்துக்கு வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளது. மக்கள் குறைகளை மாநகராட்சி கூட்டத்தில் பேசினால் மாநகராட்சியில் நிதி இல்லை பிறகு பார்க்கலாம் என தட்டிக்கழிக்கிறார்கள்.
தண்ணீர், சுகாதாரம், கழிப்பறை என வார்டு மக்கள் குறிப்பிடும் அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசியிருக்கிறேன்.
தேவைகள், திட்டப்பணிகள் குறித்து மற்ற வார்டுகளுக்கு ஆய்வுக்கு செல்லும் மேயர், துணை மேயர், மாநகராட்சி அதிகாரிகள் எங்கள் வார்டு பக்கம் வர மறுக்கிறார்கள்.
கூட்டணிக்கட்சி கவுன்சிலர் வார்டு என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என தெரியவில்லை என்றார்.