/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடால் தொடரும் விபத்துக்கள் தவியாய் தவிக்கும் பழநி 12வது வார்டு மக்கள்
/
சேதமான ரோடால் தொடரும் விபத்துக்கள் தவியாய் தவிக்கும் பழநி 12வது வார்டு மக்கள்
சேதமான ரோடால் தொடரும் விபத்துக்கள் தவியாய் தவிக்கும் பழநி 12வது வார்டு மக்கள்
சேதமான ரோடால் தொடரும் விபத்துக்கள் தவியாய் தவிக்கும் பழநி 12வது வார்டு மக்கள்
ADDED : நவ 28, 2024 06:16 AM

பழநி: பழநி நகராட்சி 12 வது வார்டு பகுதியின் முக்கிய சாலையான பழைய தாராபுரம் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கின்றன.
ராஜாஜி ரோடு, ஒன்று முதல் ஐந்து வரை குறுக்குத் தெருக்களை உள்ளடக்கிய இந்த வார்டில் ராஜாஜி ரோடு நகரை இணைக்கும் முக்கிய ரோடான பழைய தாராபுரம் ரோடுடன் இணைகிறது. ரோடு ஓரங்களில் சாக்கடைகள் சேதமடைந்துள்ளன. இறைச்சி கடைகள் அதிகம் உள்ளதால் இங்கு இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரோட்டில் செல்கிறது. மேலும் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
போக்குவரத்து இடையூறு
ஆறுமுகம், ரியல் எஸ்டேட், 5வது சந்து : பழைய தாராபுரம் சாலையில் உள்ள சுகாதார வளாகம் அருகே ரோடு சேதமடைந்தது உள்ளது. கீழ் வடம்போக்கி சந்தில் இருந்து வரும் பொதுமக்கள் நகருக்குள் வரும் வெளியூர் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் இப்பகுதியில் செல்கிறது. சேதத்தால் இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள் விபத்தில் சிக்குகின்றனர். ரோட்டின் ஒரு பகுதியில் மட்டுமே நான்கு , ஆறு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.
நோயுடன் நாய்கள் வலம்
மேயர்வளவன், ஆட்டோ ஓட்டுநர் : எங்கள் பகுதியில் நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் நடுவே நாய்கள் ஓடி திரிவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. நோயுடன் நாய்கள் சுற்றி திரிவதால் நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவு நீர் தேக்கம்
ஆனந்தன், தொழிலாளி: ராஜாஜி ரோடு மூணாவது சந்து, பகுதியில் சாக்கடை உயரமாக உள்ளதால் கழிவு நீர் செல்லாது தேங்கி நிற்கிறது. இதனை அகற்றி பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். கால்நடைகள் ரோட்டில் திரிவதையும் தடுக்க வேண்டும்.
சாலையை சீரமைக்க முறையீடு
முருகேசன், கவுன்சிலர் (வி.சி.க.,) : வார்டில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகள் முறையாக இயங்குகிறது. சாக்கடைகளில் வரும் மழை நீர் வீடுகளுக்குள் போகாமல் நடவடிக்கை எடுத்துள்ளோம். பழைய தாராபுரம் ரோட்டில் சேதமடைந்த பகுதியை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை இடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி மையம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகம் அமைக்க கோரி வருகிறேன் என்றார்.