/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதாள சாக்கடை பணிகளால் அவதி.. நாய்கள் தொல்லை.. சிரமத்தில் பழநி 15 வது வார்டு மக்கள்
/
பாதாள சாக்கடை பணிகளால் அவதி.. நாய்கள் தொல்லை.. சிரமத்தில் பழநி 15 வது வார்டு மக்கள்
பாதாள சாக்கடை பணிகளால் அவதி.. நாய்கள் தொல்லை.. சிரமத்தில் பழநி 15 வது வார்டு மக்கள்
பாதாள சாக்கடை பணிகளால் அவதி.. நாய்கள் தொல்லை.. சிரமத்தில் பழநி 15 வது வார்டு மக்கள்
ADDED : செப் 25, 2025 03:48 AM

பழநி : பாதாள சாக்கடை பணிகளால் அவதி, நாய்கள் தொல்லையால் அச்சம், கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடு என பல்வேறு பிரச்னைகளால் பழநி 15 வது வார்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பழநி, நகராட்சி 15 வது வார்டில் லட்சுமிபுரம், வள்ளலார் தெரு, ஓம் சக்தி கோயில் தெரு, ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் பொதுமக்கள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர்.
நாய் தொல்லை அதிகம் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தோடு சென்று வருகின்றனர். பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்படும் குழிகள் சரியாக மூடப்படாததால் அவதிப்படும் நிலை இருக்கிறது. சில பகுதிகளை பொதுக் கழிப்பிடமாக சிலர் பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
நாய் தொல்லை அதிகம் சரவணன்,வியாபாரி, லட்சமி புரம்: லட்சுமிபுரம் பகுதியில் நாய் தொல்லை அதிகம் உள்ளதால் அதனை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள், முதியவர்கள், அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஆங்காங்கே சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ ரோட்டில் குப்பை கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது
மூடப்படாத குழிகள் ராமதாஸ், வியாபாரம், லட்சுமிபுரம் : பாதாள சாக்கடை திட்டம் நடக்கிறது. இதற்காக, தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படுவதில்லை. இதனால் பகல் நேரங்களில் ரோட்டில் வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி கிளம்புவதால் மூச்சு விட கூட சிரமம் ஏற்படுகிறது.
சரியாக ரோடு அமைக்கப்படாததால் மழை காலங்களில் சாலையில் உள்ள மண் ஈரப்பதம் அடைந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டமிட்டு பணிகள் செய்ய வேண்டும்
கந்தசாமி(மா.கம்யூ.,), நகராட்சி துணைத்தலைவர், பழநி: நகராட்சி பகுதி முழுவதும் நாய் தொல்லை அதிகம் உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாய்களுக்கு உணவு அளித்து வரும் சிலர் அவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது.
இதற்காக குழிகள் அமைக்கப்படும் போது எடுக்கப்படும் மண் ஒப்பந்ததாரரால் முறையாக அகற்றப்படாமல் உள்ளது. பேட்ச் ஒர்க் செய்வது இல்லை.
பொதுமக்கள் குறைபாடுகள் எதுவும் கூறினால் உடனடியாக சரி செய்து தருவதில்லை. பாதாள சாக்கடை பணிகளை திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் அவதிப்படாமல் இருப்பர். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.