/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாய்கள் தொல்லையால் தவிக்கும் பழநி 20வது வார்டு மக்கள்
/
நாய்கள் தொல்லையால் தவிக்கும் பழநி 20வது வார்டு மக்கள்
நாய்கள் தொல்லையால் தவிக்கும் பழநி 20வது வார்டு மக்கள்
நாய்கள் தொல்லையால் தவிக்கும் பழநி 20வது வார்டு மக்கள்
ADDED : ஆக 07, 2025 07:12 AM

பழநி நாய்கள் தொல்லையால் பழநி நகராட்சி 20 வது வார்டு மக்கள் நித்தம் தவிக்கும் நிலை தொடர்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெரு, வெள்ளை நாடார் தெரு, சங்கிலி சந்து, குயவர் தெரு, உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு குறுகிய சந்துகளை கொண்டுள்ளது. இதில் சங்கிலி தேவர் சந்து பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து அருகில் உள்ள போர்வெல் மோட்டார் மூலம் இணைப்பு வழங்கப்பட்டால் இப்பகுதிக்கு தண்ணீர் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
தேவை போலீஸ் ரோந்து செந்தில்குமார், எண்ணை கடை உரிமையாளர், முத்துராமலிங்க தேவர் தெரு : நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. முதியவர்கள் குழந்தைகள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டின் வாசலிலே நாய்கள் படுத்து கிடப்பதால் குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர். வார்டு பகுதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
போயே போச்சு துாக்கம் நாகரத்தினம், குடும்பத் தலைவி, சங்கிலி தேவர் சந்து : பாதாள சாக்கடை திட்டத்தை இந்த வார்டுக்குள் விரைவில் கொண்டு வர வேண்டும். எங்கள் பகுதியில் உப்பு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசு தொல்லை அதிகம் உள்ளது. தெரு நாய்கள் இரவு முழுவதும் குறைப்பதால் துாங்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது.
நகராட்சி மூலம் நடவடிக்கை பத்மினிமுருகானந்தம், கவுன்சிலர், (காங்) : தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பணி விரைவில் துவங்க உள்ளது. ரோந்து பணி குறித்து போலீசாருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்றார்.