UPDATED : அக் 10, 2026 11:01 PM
ADDED : அக் 10, 2026 10:19 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: வேடசந்துார் அருகே சிகராம்பட்டி கிராம மக்கள் பஸ் வசதி கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
மல்வார்பட்டி ஊராட்சி சிகராம்பட்டி சுற்றுப்பகுதி மக்கள் வேடசந்துார், வடமதுரை செல்வதற்கு ஒரு கி.மீ., துாரம் நடந்து ஸ்ரீராமபுரம் பஸ் ஸ்டாப்பிற்கு வர வேண்டியுள்ளது. தங்கள் பகுதிக்கு தார் ரோடு வசதியுள்ள நிலையில், அரசு டவுன் பஸ் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை வலியுறுத்தி நேற்று ஸ்ரீராமாபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்சை மறித்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, போக்குவரத்து துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.
