UPDATED : அக் 10, 2026 10:23 PM
ADDED : அக் 10, 2026 10:19 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அக்.,8ல் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் 13 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என 30 பதக்கங்களை வென்றனர். மாணவ, மாணவிகள் இரு பிரிவுகளிலும் அதிக பதக்கங்களை வென்று இப்பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது.
இப்பள்ளியின் 18 மாணவர்கள் அக்.,28ல் சேலம் மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.
