UPDATED : அக் 10, 2026 10:23 PM
ADDED : அக் 10, 2026 10:19 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை அரசு முஸ்லிம் துவக்கப்பள்ளியில் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் தொழிலாளர்கள் நலவாரிய உதவி திட்ட பயனர் பதிவு முகாம் நடந்தது.
மாவட்ட தலைவர் அப்தாகிர் தலைமை வகித்தார். தனிநபர் விபத்து நிவாரணம், இயற்கை மரண உதவி, ஈமச்சடங்கு உதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் மக்களுக்கு விண்ணப்பம் பதிவு செய்து தரப்பட்டது. நிர்வாகிகள் பவுசூர் ரஹ்மான், பொதுமக்கள், தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
