UPDATED : அக் 10, 2026 11:02 PM
ADDED : அக் 10, 2026 10:19 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்த முயன்றவர்களை கைது செய்ததை கண்டித்து கோஷமிட்டனர். மா.கம்யூ., இ.கம்யூ., கம்யூ.,(லெனினிஸ்ட்) உள்ளிட்ட கட்சியினர், தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
