/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....
ADDED : டிச 27, 2024 05:23 AM

சேதமான கைப்பிடி சுவர்கள் : வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் உடைந்து விட்டன. இதனால் வாகனங்கள் தவறி ஆற்றுக்குள் கவிழும் அபாயம் உள்ளது. விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். --ஜான், சின்னுப்பட்டி.
-------ரோட்டில் தேங்கும் கழிவுநீர் : திண்டுக்கல் பழனியப்பாநகர் 2வது தெருவில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. கழிவுநீர் செல்ல நடவடிக்கை வேண்டும்.
-பாலகுரு, திண்டுக்கல்.
--------சுரங்கபாதையில் மழைநீர் : திண்டுக்கல் ஆர்.எம்.காலனியிலிருந்து அறிவு திருக்கோயில் செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வர்ஷினி, திண்டுக்கல்.
--------செடிகள் படர்ந்த மின்கம்பம் : வேடசந்துார் கல்வார்பட்டியில் ரேஷன் கடை அருகே தெரு விளக்கு மின் கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. மின்கம்பம் தெரியாத அளவுக்கு படந்துள்ள செடிகளால் விபத்து அபாயம் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள செடிகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
-ஆர்.கண்ணபிரான், வேடசந்துார்.
---------
பள்ளத்தால் பரிதவிப்பு : பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து திரு ஆவினன்குடி கோயிலுக்கு செல்லும் குளத்துார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பக்தர்கள் அதிகம் செல்வதால் இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.
-குமரன், பழநி.
-------
குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் அனுமந்தநகரில் குவிந்த பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இவைகளை மாடுகள் மேய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை கொட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, திண்டுக்கல்.
----------அச்சுறுத்தும் அங்கன்வாடி மையம் : நிலக்கோட்டை உச்சனம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைகாலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது. குடிநீர் தொட்டியும் இல்லை. அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யர்பாண்டி விளாம்பட்டி.