ADDED : ஜன 09, 2026 06:08 AM
பழநி: பழநி புது தாராபுரம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மாலை அதிக நேரம் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பழநி புது தாராபுரம் ரோடு நகருக்குள் வரும் முக்கிய பிரதான சாலையாகும். இதில் சத்யா நகர் பகுதி ரயில்வே கிராசிங் உள்ளது. ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்க வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. காலை, மாலை நேரத்தில் ரயில்வே கேட் அதிக நேரம் அடைக்கப்படுவதால் பள்ளி, அலுவலகம், கல்லுாரிக்கு செல்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
