/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரமற்ற ரோடு பேட்ச் ஒர்க் பணியால் மக்கள் அவதி! உள்ளாட்சிகள் கவனம் செலுத்தலாமே

ADDED : மே 20, 2024 06:17 AM

மாவட்டத்தின் பல இடங்களில் ரோடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் ஊராட்சிகளின் பல பகுதிகளில் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளாகிறது. தற்போது இந்த ரோடுகளை சீரமைப்பு பணி என்ற பெயரில் பள்ளமான இடங்களை ஜல்லிக்கற்கள், தார் நிரப்பி பேட்ஜ் ஒர்க் பணி செய்கின்றனர்.
சமீபத்தில் பெய்து வரும் கோடை மழையின் சிறிய துாரலுக்கும் கூட தாக்குபிடிக்காமல் இந்த ரோடு பேட்ஜ் ஒர்க் சேதமாகிறது. பள்ளங்களில் நிரப்பபட்ட தார்,ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு முழுவதும் சிதறி கிடப்பதால் அதன் கூரான கற்களால் அவ்வழியில் செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகுகிறது. இதனால் பலர் இந்த ரோட்டின் மீதான வழிப்பாதையை தவிர்த்து வேறு பாதைகளில் செல்கின்றனர்.
ரோடு பணியை முழுமையாகவும், நிறைவாகவும் செய்தால்தான் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்கும். அதைவிட்டு சிலநாட்களில் சிதைந்து போகும் ரோடு பேட்ஜ் ஒர்க் பணிகளை உள்ளாட்சிகள் மேற்கொள்வது வெட்டி செயலாகும் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.