/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் அல்லல்படும் மக்கள்
/
ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் அல்லல்படும் மக்கள்
ADDED : நவ 25, 2024 05:02 AM

பழநி : பழநி இடும்பன் கோயில் இட்டேரி ரோடு, குறவன் பாறை ரோடு, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்திருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
பழநியில் கார்த்திகை மாதம் முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிரிவீதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ரோட்டோர வியாபாரிகள் , சிறு வியாபாரிகளுக்கு மாற்று இடம் அறிவிக்கப்படவில்லை.
போதிய பார்க்கிங் வசதி அடிவாரப் பகுதியில் இல்லை. அருள்ஜோதி வீதி, ஆண்டவன் பூங்கா ரோடு ஆகிய ரோடுகளில் இரு புறமும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த சிரமப்படுகின்றனர்.
நேற்று அருள்ஜோதி வீதியில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அருள்ஜோதி வீதி,கிரிவியை இணைக்கும் அதிக அளவில் பக்தர்கள் பயன்படுத்தும் குறவன் பாறை ரோடு,ஆண்டவன் பூங்கா ரோட்டிலிருந்து கோயில் சுற்றுலா வாகன நிறுத்தம் செல்லும் முக்கிய பாதையான இடும்பன் கோயில் இட்டேரி ரோடு ஆகிய பகுதி ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இதனால் போக்குவரத்து ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.