UPDATED : ஜூலை 30, 2026 06:35 PM
ADDED : ஜூலை 30, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:வடமதுரை, அய்யலுார் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மில், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் கடினமான வேலைகளும் செய்ய முடியாமல் ஆடு வளர்ப்பை நம்பி வாழ்கின்றனர். இதற்கு தற்போது சிக்கல் அதிகரித்து வருகிறது.
ரோட்டோரம் மேய்ச்சலுக்கு விடும் போதும், வீடுகளில் கட்டி வைத்திருக்கும் போதும் ஆடுகள் திருடு போகின்றன. கார், டூவீலர்களில் வலம் வரும் கும்பல் சில நிமிடங்களில் திருடிச்சென்றுவிடுகின்றனர்.
கொம்பேறிபட்டி, முடக்குபட்டி, கருவார்பட்டி, வேங்கனுார், வேல்வார்கோட்டை, காணப்பாடி பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் ஆடு வளர்ப்பை நம்பியுள்ள மக்கள் கடும் அதிருப்தி, வேதனையுடன் உள்ளனர்.
