தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பராமரிப்பில்லாத கழிப்பறை

பராமரிப்பில்லாத கழிப்பறை

பராமரிப்பில்லாத கழிப்பறை


ADDED : பிப் 07, 2024 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரியாத உயர் கோபுர விளக்குகள்

திண்டுக்கல் - வத்தலக்குண்டு ரோடு பித்தளைபட்டி பிரிவில் உயர் மின் கோபுர விளக்கு இரவு நேரங்களில் எரியவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரி,பித்தளைபட்டி.--------

கழிவுநீரால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல் கிழக்கு ரத வீதி பெங்காலி மார்க்கெட் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியே கசிந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரகாஷ், திண்டுக்கல்.---------

குப்பையால் மக்கள் அவதி

திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் சிதறி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. முறையாக குப்பை தொட்டி வைத்து தினந்தோறும் குப்பையை அகற்ற வேண்டும். சக்திவேல், திண்டுக்கல்.----------

கழிவு மணல்களால் பாதிப்பு

திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே சாக்கடை கால்வாய் துார்வாரி கழிவுமண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றாமல் உள்ளதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிவு மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புசாமி,திண்டுக்கல்.----------

அடிகுழாயால் ஆபத்து

திண்டுக்கல் குட்டியபட்டி ரோட்டில் உள்ள அடி குழாயால் போக்குவரத்து இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். பயன்பாடின்றி உள்ள அடிகுழாயை அகற்ற வேண்டும். கந்தசாமி, குட்டியபட்டி.-----------

சேதமான ரோடுகளால் தவிப்பு

திண்டுக்கல் மேற்குரத வீதி நடுரோட்டில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் விபத்தும் நடக்கிறது. ரோடை சீரமைக்க வேண்டும். கர்ணன், மேற்கு ரத வீதி.-----------

பராமரிப்பில்லாத கழிப்பறை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாமல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும். கணேசன், திண்டுக்கல்.--------

.................................................

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us