sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மிரட்டும் மின் கம்பத்தால் மிரளும் மக்கள்

/

மிரட்டும் மின் கம்பத்தால் மிரளும் மக்கள்

மிரட்டும் மின் கம்பத்தால் மிரளும் மக்கள்

மிரட்டும் மின் கம்பத்தால் மிரளும் மக்கள்


ADDED : நவ 08, 2024 04:38 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ் படிக்கட்டில் பயணம் : திண்டுக்கல்லில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கிக்கொண்டே செல்கின்றனர்.இதனால் விபத்து அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

--விஷ்ணு, திண்டுக்கல்.

......-------

சேதமான தரை பாலம் : எரியோடு செங்கோட்டைபட்டி அன்ன சமுத்திரம் இடையே ரோடு தரைப் பாலம் சேதமடைந்து உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் விபத்தை சந்திக்கும் நிலை தொடர்கிறது . இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -

-தங்கவேலு, எரியோடு.

..............-------

ரோட்டில் ஓடும் கழிவு நீர் : திண்டுக்கல் நேருஜி ரவுண்டானா அருகே ரயில்வே சுரங்கப்பாதை சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது .கொசுக்கள் உற்பத்தியாக பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். இதன் மீது நடவடிக்கை வேண்டும்.

-ஈஸ்வரன், திண்டுக்கல்.

..............-------

குப்பையால் பரவும் தொற்று : திண்டுக்கல் அருகே கொட்டபட்டியில் குப்பையை கொட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளதால் சிதறி கிடக்கிறது. பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது .குப்பையை தினந்தோறும் அகற்ற வேண்டும்.

-முனியாண்டி, திண்டுக்கல்.

..............--------

சாய்ந்த மின் கம்பம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி தும்மிச்சம்பட்டியில் இருந்து நாயக்கனுார் செல்லும் ரோட்டில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போதும் விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பாக இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--செந்தில்நாதன் ஒட்டன்சத்திரம்.

...............--------

நாய்களால் அச்சம் : குஜிலியம்பாறை தாலுகா பாளையம் -திருச்சி செல்லும் வழியில் நாய்கள் தொல்லை அதிகமாகி கொண்டே போகிறது.ரோட்டில் 20க்கு மேற்பட்ட நாய்கள் சுற்றி திரியும் நிலையில் இங்கு குழந்தைகள், வாகனத்தில் செல்பவர்களும் அச்சப்படுகின்றனர்.

-ரவிக்குமார், பாளையம்.

.........---------

மேடு பள்ளமான ரோடு : ஒட்டன்சத்திரம் வள்ளுவர் நகர் செல்லும் ரோடு மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பாத சாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் ரோடை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொ. தங்கையா, ஒட்டன்சத்திரம்.

............--------






      Dinamalar
      Follow us