/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அள்ளப்படாத குப்பை அல்லாடும் மக்கள்
/
அள்ளப்படாத குப்பை அல்லாடும் மக்கள்
ADDED : ஜூலை 11, 2025 03:19 AM

குதிரைகளால் அச்சம்
பழநி புதுதாராபுரம் ரோட்டில் குதிரைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது .இப்பகுதி பள்ளி மாணவர்கள் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர். குதிரைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.விக்னேஷ், பழநி.
................-------
ரோட்டில் பாயும் கழிவு நீர்
அய்யலுார் பொட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே ரோட்டோர பாலம் அடைப்பட்டுள்ளதால் கழிவு நீர் ரோட்டில் பாய்கிறது.அவ்வழியே செல்வோர் சுகாதாரக்கேட்டால் பாதிக்கின்றனர். இதன் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். --- மணி, அய்யலுார்.
.....................--------சேதமான நிழற்கூடம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் எம்.அம்மாபட்டி அருகே கொட்டாரபட்டி பஸ் ஸ்டாப் நிழற்கூடம் சேதமடைந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.இங்கு பயணிகள் செல்ல அச்சப்படும் நிலையில் ரோட்டில் நிற்கின்றனர். -சி.முருகராஜ், கொட்டாரபட்டி.
....................--------
விபத்தை நோக்கி மின் கம்பம்
சாணார்பட்டி அருகே செங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள மின்கம்பம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. விபத்து அபாயம் உள்ளதால் சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். பழனியப்பன், கே.அய்யாபட்டி.
...........--------விபத்து அபாயம்
திண்டுக்கல் அருகே தோட்டனுாத்தில் மேல்நிலைத் தொட்டி அடிப்பகுதி சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது . இதன் துாண்கள் ரோட்டோரத்தில் இருப்பதால் இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழனிச்சாமி தோட்டனுாத்து.
...............--------
அள்ளப்படாத குப்பை
திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாகியும் அள்ளாமல் உள்ளது. பிளாஸ்டிக் கலந்து சுகாதாரக்கேடுடன் உள்ளதோடு சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை அகற்ற வேண்டும் . கோவிந்தன், திண்டுக்கல்.
...............--------
சாக்கடையை துார்வாருங்க
திண்டுக்கல் மேட்டுப்பட்டி தண்ணீர் தொட்டி ரோட்டில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடை ஏற்படுத்துகிறது. குழந்தைகளும் உடல் நலம் பாதிக்கின்றனர் .சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,கல்யாணி, திண்டுக்கல்.
...............--------