/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் மீட்டர்கள் தட்டுப்பட்டால் பரிதவிக்கும் மக்கள்
/
மின் மீட்டர்கள் தட்டுப்பட்டால் பரிதவிக்கும் மக்கள்
மின் மீட்டர்கள் தட்டுப்பட்டால் பரிதவிக்கும் மக்கள்
மின் மீட்டர்கள் தட்டுப்பட்டால் பரிதவிக்கும் மக்கள்
ADDED : பிப் 16, 2025 03:35 AM
கோபால்பட்டி : தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் பொதுமக்களுக்கு மின்சாரம் தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் கோபால்பட்டி குரும்பபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேட்டுக்கடை, அஞ்சுகுளிபட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு கொடுக்க வசதிகள் இருந்தும் , போதுமான மின் மீட்டர்கள் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் போது இணைப்பு விரைவில் வழங்கப்படுவதில்லை.
அதே நேரம் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளின் பயன்பாட்டில் உள்ள மின் மீட்டர் பழுதடைந்தால் உடனடியாக மாற்றி தருவதில்லை. அதற்கும் காலதாமதம் ஆகிறது. மின் மீட்டர் பழுதடைந்து புதிய மின் மீட்டர் பொருத்தவும் பழுது பார்க்கவும் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தாலும் இரண்டு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை காலதாமதம் ஆகிறது.
இதனால் தொழில் தொடங்குவோர், வீடு கட்டுவோர் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தினர் தங்கு தடை இன்றி புதிய மின் மீட்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

