/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுகளை கொட்டியவர்களின் டூவீலர்களை ஆற்றில் வீசிய மக்கள்
/
கழிவுகளை கொட்டியவர்களின் டூவீலர்களை ஆற்றில் வீசிய மக்கள்
கழிவுகளை கொட்டியவர்களின் டூவீலர்களை ஆற்றில் வீசிய மக்கள்
கழிவுகளை கொட்டியவர்களின் டூவீலர்களை ஆற்றில் வீசிய மக்கள்
ADDED : செப் 23, 2024 02:15 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மீன், கோழி கழிவுகளை கொட்டியவர்கள் வந்த டூவீலர்களை சிறை பிடித்த அப்பகுதி மக்கள் நங்காஞ்சி ஆற்றில் வீசினர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் ஏராளமான மீன், கோழிக்கடைகள் உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனை அதிகமாக இருந்தது.
இக்கழிவுகளை சிலர் சாக்குப் பைகளில் அள்ளி 2 டூவீலர்களில் கொண்டு வந்து தங்கச்சியம்மாபட்டி அருகிலுள்ள நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தின் கீழ் வீசினர்.இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சிறைபிடித்து அவர்களிடமிருந்த டூவீலர்களை ஆற்றுக்குள் வீசினர். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பொதுமக்கள் கூறியதாவது: தினமும் இரவு நேரங்களில் கோழி, மீன் கழிவுகளை ஆற்றில் கொட்டி செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைவதுடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. விவசாயிகளின் கால்நடைகளை, கழிவுகளை உண்ணவரும் நாய்கள் கடிக்கின்றன.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றனர்.