/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
/
மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
ADDED : ஜூன் 18, 2025 04:34 AM
சாணார்பட்டி: சாணார்பட்டி பகுதிகளில் மார்க்சிஸ்ட் சார்பில் மக்கள் நல கோரிக்கைகளை வைத்து மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது.
வி.எஸ் கோட்டை புதுப்பட்டி, சில்வார்பட்டி, மணியாரகான்பட்டி, பாறைப்பட்டி, ஒத்தக்கடை, கணவாய்பட்டி பங்களா, மேட்டுப்பட்டி, வடுகப்பட்டி, செடிபட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்து கோபால்பட்டியில் நிறைவடைந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆசாத், அஜாய் கோஸ், ஒன்றிய செயலாளர், மாவட்ட குழு உறுப்பினர் பாப்பாத்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா, முருகன், சிலம்பரசன், கருப்புசாமி கலந்து கொண்டனர்.
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா , அவுட்டர் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது.ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ராணி,மாவட்ட குழு உறுப்பினர்கள் சின்னக்கருப்பன், பெருமாள், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
நத்தம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் டாக்டர்களை நியமிக்கவும், செந்துறை புதிய பஸ்ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி கோஷங்கள்எழுப்பினர்.