ADDED : செப் 12, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்:வேடசந்துார் ஆத்துமேட்டில் தமிழ்நாடு சத்துணவு ,அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது.
வட்டாரத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பொருளாளர் முனியம்மாள், துணைத் தலைவர் ராமலிங்கம், ஓய்வு ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரினர். மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் வட்டாரத் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் நாராயணசாமி, வட்டார செயலாளர் காளிமுத்து பேசினர்.