/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு
/
விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு
ADDED : பிப் 17, 2025 05:14 AM
ரெட்டியார்சத்திரம் : மக்காச்சோள அறுவடை, வெங்காய நடவு ஆயத்த பணிகள் மும்முரம் அடைந்துள்ளதால் ரெட்டியார்சத்திரம் பகுதியில் கூலியாட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்தாண்டு தாமத மழையால் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாலான கண்மாய்களுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதற்கேற்ப மக்காச்சோள சாகுபடி பணிகளை துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. பருவகால மாற்றம், படைப்புழு தாக்குதல், சொங்குப்புல் பாதிப்பால், பரவலாக மகசூல் வெகுவாக பாதித்தது. மாங்கரை, அம்மாபட்டி, கசவனம்பட்டி, தர்மத்துப்பட்டி, குட்டத்துப்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், மக்காச்சோள அறுவடை பணிகள் தற்போது மும்முரமாக நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் வெங்காயம் நடவு பணிகளும் துவங்கியது. ஒரே நேரத்தில் அறுவடை, நடவு பணிகள் நடப்பதால், கூலியாட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
திப்பம்பட்டி விவசாயிகள் சிலர் கூறுகையில்,மக்காச்சோள அறுவடை பணியில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட நிலத்தின் ஈரப்பதம் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. வேலை உறுதி திட்ட பணிகள் நடப்பதால் வெங்காய நடவிற்காக நிலத்தை தயார்படுத்தல், உழவு, பாத்தி அமைத்தலுக்கு கூலியாட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றனர்.

