ADDED : ஜன 22, 2026 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் வட்டார எல்லையில் தங்கி பணிபுரிவதற்கான அமெச்சுப் பணிகளில் திருத்தம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், நில அளவை ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் விக்னேஷ்வரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகி முத்தையா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி, செயலாளர் சுகந்தி பேசினர்.

