/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., ஆட்சி அமைய முருகனிடம் மனு
/
பா.ஜ., ஆட்சி அமைய முருகனிடம் மனு
ADDED : மார் 30, 2025 03:07 AM

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வருகை புரிந்த பா.ஜ., மதுரை மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் முத்துராமன் தமிழகத்தில் மது இல்லாதநிலை ஏற்பட ,பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய கோரிக்கை மனு அளித்தாக தெரிவித்தார்.
பழநி முருகன் கோயிலுக்கு மதுரையை சேர்ந்த பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முத்துராஜன் வந்தார். அப்போது அவர் ,தமிழகத்தில் மது என்ற அரக்கனை முன் வைத்தே ஆட்சி செய்கின்றனர்.
இதன் விளைவாக பெண்களின் தாலியறுக்கப்படுகிறது. இளைஞர்களின் வாழ்க்கை பறிபோகிறது தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. பலர் போராடிவிட்டனர்.
மாநில தலைவர் அண்ணாமலை கருப்பு சட்டை அணிந்து போராடுகிறார். இதற்கு தீர்வாக பா.ஜ.,கட்சியின் தலைமையில் நல்லாட்சி அமைய முருகப்பெருமான் வேலேடுத்து மது அரக்கனை வதம் செய்து பா.ஜ., தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என தமிழ் கடவுள் பழநிமலை முருகனிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.